tamilnadu

img

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...  வரும் 9-ஆம் தேதி வங்கக்கடல் பகுதியில் உருவாகிறது...  

சென்னை 
தமிழகத்தில் மழை கால சீசன் துவங்கியுள்ளது. கடந்த 4-ஆம் தேதி உருவான  காற்றழுத்த தாழ்வு பகுதியால் தேனி, கோவை, நீலகிரி ஆகிய பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதில் நீலகிரி மாவட்டத்தில் அதிகளவில் கனமழை பெய்து வருகிறது. அங்கு வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில், வரும் 9-ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,"வங்கக்கடலில் மீண்டும் 9-ஆம் தேதி மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியில் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ரெட் அலர்ட் செயல்படுத்த வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கடந்த 4-ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து 2 நாளில் வலுவிழக்கும் நிலையில் உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;