tamilnadu

img

கோவை, நீலகிரியில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு  மையம் எச்சரிக்கை

சென்னை:
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், அரியலூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழையும் பெய்யக்கூடும்.அடுத்த 48 மணி நேரத்தில் உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். கோவை நீலகிரி மாவட்டங் களில் கனமழை பெய்யும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

;