tamilnadu

img

மீன் விற்பனையாளர்கள் சங்கம் உதயம்

புதுச்சேரி, ஜூன் 4-புதுச்சேரி  கிழக்கு கடற்கரை சாலை கருவடிக்குப்பத்தில் சிஐடியு மீன் விற்பனையாளர் சங்க கிளை திறப்பு விழா நடைபெற்றது. சங்கத் தலைவர் சௌந்தரி தலைமை தாங்கினார். சிஐடியு பிரதேசத் தலைவர் கே.முருகன் சங்க கொடியை ஏற்றி வைத்தார். இணைச் செயலாளர் பிரபு ராஜ் சங்க பெயர் பலகை திறந்து வைத்தார். சிஐடியு பிரதேச துணைத் தலைவர் ராமசாமி, செயலாளர் சீனுவாசன், மாதர் சங்க பிரதேசச் செயலாளர் சத்தியா, குடியிருப்போர் சங்க நிர்வாகி ராம்ஜி, வாலிபர் சங்க நிர்வாகி பாஸ்கர் மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்கத்தலைவர் இளங்கோ உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். சங்க செயலாளர் குப்புசாமி, பொருளாளர் கண்ணகி உள்ளிட்ட மீன் விற்பனை செய்யும் பெண்கள் திரளானோர் பங்கேற்றனர்.

;