சென்னை:
மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்யும் போது அடிக்கடி தொழிலாளர்கள் உயிரிழப்பதால் அவர்களது குடும்பம் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள குறவன் இன மக்களின் வாரிசுகளுக்கு மாற்று வேலைவாய்ப்பு வழங்க தொழிற்பயிற்சி அளிக்க வேண் டும் என்று தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஏ.வி. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் தனியார் வீட்டு உரிமையாளரின் அழைப்பின் பேரில் 2.7.2020 அன்று செப்டிக் டேங்கில் உள்ள கழிவுநீர் அகற்றும் போது திருநெல்வேலி மாவட் டம் வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த குறவன் சமுதாய இளைஞர்கள் (1)பாண்டி (2)பாலா (3) தினேஷ்குமார் (4)இசக்கிமுத்து ஆகிய நான்கு பேரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.மலக்குழியில் இறங்கி மலம் அள்ளவும் கையால் மலம் அள்ளவும் தடை விதித்து சட்டம் உள்ள போதிலும் மேற்கண்ட நான்கு இளைஞர்களை மலக்குழியில் இறங்க வைத்து அந்த வேலையைச் செய்ய வைத்த வீட்டு உரிமையாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்இறந்து போன இளைஞர்கள் நான்கு பேரும் அவர்கள் சார்ந்த அந்த குடும்பத்தைக் காப்பாற்றும் நிலையிலிருந்தவர்கள். அவர்களே இறந்து போன நிலையில் நிர்க்கதியாக நிற்கும் அவர்களது குடும்பத்திற்குத் தமிழக அரசு தலா 50 லட்சம் ரூபாய் நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அவர்களது குழந்தைகளின் கல்விச்செலவுகளையும் அரசே ஏற்க முன்வரவேண்டும்குறவன் இனமக்கள் விஷவாயு தாக்கி இறப்பது என்பது தொடர்கதையாகி எத்தனையோ பேர் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும்போது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பட்சத்தில் ஒரு சிறு நஷ்ட ஈடு வழங்கப்படுகிறது. அது இறந்துபோன தொழிலாளர் குடும்பங்களுக்கு ஈடுசெய்வதாகாது.மாறாக இம்மக்களுக்கு போதிய கல்வியும், தொழிற்பயிற்சியும் வழங்கி வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதன் மூலமே இவர்களின் வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்படுத்தமுடியும். எனவே இவர்களுக்கென்று பிரத்யேகமாக தொழிற்கல்வியைப் பயிற்றுவித்து வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்றச் சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.