tamilnadu

பழங்குடியின மாணவர்கள் பயன்பெற ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்திடுக மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தல்

கோவை, ஜூலை 30- கோவை மாவட்டத்தில் உள்ள வனக் கிராமங்களில் வசிக்கின்ற பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் விதத்தில் பகுதி வாரியாக ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகளை நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மலைவாழ் சங்கம் வலியு றுத்தியுள்ளது. இதுகுறித்து மலைவாழ் மக்கள் சங்கத் தின் கோவை மாவட்டத் தலைவர் வி.எஸ்.பரமசிவம் தமிழக முதல்வருக்கும், கோவை மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பிய கடிதத் தில் கூறியுள்ளதாவது: கொரோனாவின் தாக்குதலால் மார்ச் 24 முதல் தற்போது வரை தமிழகம் முழுவதும் பள்ளிகள் செயல்படா மல் உள்ளது. இந்நிலையில், தமிழக அர சாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஆன் லைன் கல்வி முறை கோவை மாவட்டத்தில் வாழுகிற எண்ணற்ற பழங்குடியின மாண வர்களுக்கு சென்றடைய கூடிய விதத்தில் இல்லை. அவர்கள் வாழுகிற பகுதிகளில் மின்சார வசதிகளோ, நவீன தொழில்நுட்ப வசதிகளோ ( தொலைக்காட்சி, ஆண்ட் ராய்டு மொபைல்) இல்லாததால் சுமார் 500க்கும் மேற்பட்ட பழங்குடியின மாண வர்கள் இந்த இணையதள வழி கல்வி முறை யால் தங்களுக்கான கல்வி பெறமுடியாமல் போகும் நிலைமை உருவாகியுள்ளது.  

ஆகவே, பழங்குடியின குடியிருப்புக ளில் வாழுகிற, தற்போது மேல்நிலைக்கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியிக்கு அருகாமையில் உள்ள அரசுப் பள்ளிகளிலேயே, ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்திட வேண்டும். இவர் களை அழைத்து வர வாகன வசதிகளும் செய்து தர உத்தரவிட வேண்டும். ஒன் றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வி பயிலுகின்ற மாணவர்களுக்கு அவர் கள் வசிக்கும் பகுதியிலேயே ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்திட உதவிட வேண்டும். மேலும், இம்மாணவர்களுக் கான காலை மற்று மதிய சத்துணவை வழங் கிடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டு மென கேட்டுக் கொள்ளப்படுவதாக அக்கடி தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.