tamilnadu

img

பிரபல ஹாலிவுட் நடிகர் பென் கிராஸ் காலமானார்…

வியன்னா 
ஹாலிவுட் என அழைக்கப்படும் ஆங்கில மொழிக்கான திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் பென் கிராஸ் (72). இங்கிலாந்தில் பிறந்த இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பெயர் பெற்றவர். 

25-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள பென் கிராஸ் நேற்று (ஆக., 18) ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் காலமானதாக அவரது மகள் அறிக்கை வெளியிட்டுள்ளார். பென் கிராஸ் இன்னும் 5 ஹாலிவுட் படங்களை கையிருப்பில் வைத்துள்ளார். அந்த படங்களின் வேலைகள் கொரோனாவால் பாதியில் உள்ளது என்பது குறிபிடத்தக்கது. பென் கிராஸ் மரணத்திற்கு நடிகர் நடிகைகள் சமூக வலைதளம் மூலம் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.  

;