tamilnadu

img

பிரபல பிரிட்டன் நடிகர் ராபர்ட் பேட்டின்ஸனுக்கு கொரோனா தொற்று…

லண்டன் 
பிரபல இங்கிலீஷ் நடிகரான ராபர்ட் பேட்டின்ஸன் (34) ஹாலிவுட் தரத்தில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தொலைகாட்சித் தொடர்களிலும் அதிகம் நடித்துள்ள ராபர்ட் சிறந்த இசையமைப்பாளரும் கூட. 

இந்நிலையில் பிரிட்டனில் கொரோனா பரவல் சற்று கட்டுக்குள் இருப்பதால் (?) அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனால் படப்பிடிப்புகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. அமெரிக்க காமிக்ஸ் கதாபாத்திரமான பேட்மேன் கதையை மையமாக கொண்டு மேட் ரீவ்ஸ் இயக்கும் ‘தி பேட்மேன்’ எனப்படும் இங்கிலிஷ் படத்தில் நடித்து வரும் ராபர்ட் பேட்டின்ஸனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவர் எந்த மருத்துவமனையில் உள்ளார் அல்லது வீட்டில் தனிமையில் உள்ளாரா? என்ற முழுவிபரம் இன்னும் வெளியாகவில்லை.     

;