tamilnadu

img

காரைக்குடி கண்டாங்கி சேலை மற்றும் திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு

காரைக்குடி கண்டாங்கி சேலை மற்றும் திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் புவிசார் குறியீட்டு பொருள்கள் சட்டம் கடந்த 2003-ல் அமல்படுத்தப்பட்டது. நாட்டில் உள்ள தனிச் சிறப்பு, தனி வரலாறு, தயாரிப்பு முறை, தனி அடையாளம் காண்பதற்கான இடம் ஆகியவற்றை கொண்டுள்ள பொருட்கள் புவிசார் குறியீடு சட்டத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.இந்த சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டால் அப்பெயரை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது. 

ஏற்கனவே, காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமுக்காளம், சின்னாளபட்டி சுங்குடி சேலை, ஆரணி பட்டு சேலை, கோவை கோரா காட்டன் சேலை, தஞ்சாவூர் ஓவியம், தலையாட்டி பொம்மை, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, பத்தமடை பாய், தோடா மக்களின் பூ வேலைப்பாடு, கொடைக்கானல் மலை பூண்டு, பழனி பஞ்சாமிர்தம் ஆகியன இடம்பெற்றுள்ளன. 

இந்நிலையில் காரைக்குடி கண்டாங்கி சேலை, திண்டுக்கல் பூட்டு  ஆகியவற்றுக்கு தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதன் மூலம் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற பெருமையை பெறுகின்றன.
 

;