tamilnadu

img

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் தஹானு தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் வினோத் நிகோலே மகத்தான வெற்றி

மும்பை, அக். 24 - மகாராஷ்டிரா சட்ட மன்றத் தேர்தலில் தஹானு சட்டமன்றத் தொகுதி யில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர் வினோத் நிகோலே 71ஆயிரத்து 140 வாக்குகள் பெற்று மகத்தான வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை அடுத்து வந்த பாஜக வேட்பாளரை விட 4ஆயிரத்து 321 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி வாகை சூடினார். தஹானு தொகுதி பழங்குடி மக்களின் நம்பிக்கையைப் பெற்ற மார்க்சிஸ்ட் கட்சி, அத்தொகுதியில் மாபெரும் வெற்றி யை பதிவு செய்திருப்பதற்கு கட்சியின் அகில இந்திய தலைவர்களும், பல் வேறு மாநிலங்களின் தலைவர்களும், தோழர்களும் வாழ்த்து தெரிவித்துள் ளனர். மகாராஷ்டிரா தேர்தலில் சில குறிப்பிட்ட தொகுதி களில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அதிகபட்ச வாக்குகளைப் பெற்ற நிலை யிலும் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. குறிப்பாக கல்வான் தொகுதியில் போட்டியிட்ட கட்சியின் மத்தி யக்குழு உறுப்பினரும் அப் பகுதி மக்களின் அன்பைப் பெற்ற தலைவருமான ஜே.பி.கேவிட் 80ஆயிரத்து 72 வாக்குகளை பெற்றுள் ளார். எனினும் 86ஆயிரத்து 474 வாக்குகள் பெற்ற தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் நிதின் அர்ஜுனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். மேற்கு நாசிக் தொகுதியில் போட்டி யிட்ட மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.எல். கராட் 19 ஆயிரத்து 760 வாக்குகள் பெற்றுள் ளார். சோலாப்பூர் சென்ட்ரல் தொகுதியில் போட்டியிட்ட நரசய்யா 10ஆயிரத்து 108 வாக்குகள் பெற்றுள்ளார்.

;