tamilnadu

img

தமிழகத்தில் 13 மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு

சென்னை:
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தருமபுரி, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சனிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது.

;