tamilnadu

img

கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு...

சென்னை:
தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு கடலோரப் பகுதியில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும்.

தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய உள் மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளது.