tamilnadu

img

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜோயல் ஸ்குமாச்சர் காலமானார்...

நியூயார்க் 
பிரபல ஹாலிவுட் இயக்குனாரான ஜோயல் ஸ்குமாச்சர் இவர் படங்களை இயக்குவது மட்டுமின்றி டிசைனிங், கேமியோ, தொலைக்காட்சி தொடர்கள், இசை அமைப்பாளர் போன்ற பன்முகத்தன்மை வாய்ந்தவர். இவர் இயக்கிய பேட்மேன் படங்கள் (பேட்மேன் பார் எவர் மற்றும் மேட்மேன் அண்ட் ராபின்) மிகவும் பிரபலம்.

இந்நிலையில் புற்றுநோய் காரணமாக தனது 80-வது வயதில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜோயல் ஸ்குமாச்சர் காலமானார். இளம் நடிகர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் முதன்மையானவர் என்ற பெருமையை பெற்ற ஜோயல் ஸ்குமாச்சர் தனது படங்கள் வெற்றி பெற்றாலும் சரி தோல்வி அடைந்தாலும் சரி எவ்வித சலனமில்லாமல் அடுத்த பட வேலைகளுக்கு ஆயத்தமாகிவிடும் சிறப்பு மனநிலை கொண்டவர். ஹாலிவுட்டில் 1990- களில் அசைக்க முடியாத இயக்குனராக இருந்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது.     

;