சென்னை:
விஜய் ரசிகர் மன்றம் என்பது தன்னுடைய அமைப்பு என்றும் அதனை இயக்கமாக மாற்றிய போது நிறுவனராக தாமே இருந்ததாகவும் எஸ்ஏ சந்திரசேகர் கூறியுள்ளார். எனவே அந்தஇயக்கத்தை தற்போது தான் அரசியல் கட்சியாகமாற்றியுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித் துள்ளார். எல்லா தந்தை மகனைப் போலவே தங்களுக்கு இடையேயும் அவ்வப்போது சண்டை வரும் என்றும் இருவரும் பேசாமல் இருப்பது சாதாரணமான விஷயம் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.தற்போது நடிகர் விஜய்க்கே தெரியாத ரகசியம் ஒன்று அவரை சுற்றி நடந்து கொண்டிருக்கிறது என்று சந்திரசேகர் தெரிவித்துள்ளார். விஜய் ஒரு சிறிய விஷ வளையத்தில் தற்போது சிக்கியுள்ளார் அதிலிருந்து, அவரை காப்பாற்றவே தான் முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.விஜய்யை சுற்றி சில கிரிமினல்கள் இருப்பதாகவும் அவர்களால் விஜய்யை சுற்றி ஒரு ஆபத்தான விஷயம் நடந்து கொண்டிருப்பதாகவும் எஸ்ஏசி தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கை அவராக வெளியிட்டது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.