tamilnadu

img

வறுமையின் பிடியில் ஏழை-எளிய மக்கள் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமா? கும்பகோணத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், மே 20-  வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் ஏழை-எளிய மக்க ளின் இன்னல்களை அகற்றிட மத்திய- மாநில அரசுகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கும்பகோணம், திருவிடை மருதூர், வடக்கு திருவிடைமருதூர், தெற்கு திருப்பனந்தாள் ஒன்றியம், கும்பகோணம் நகரம், தாராசுரம் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  வேலை இழந்து தவிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் தலா ரூ.7500 நிவாரணம் வழங்க வேண்டும். மக்களின் வாழ்வை சீர ழிக்கும் டாஸ்மாக் மதுக்கடையை உட னடியாக மூட வேண்டும். 8 மணி நேர  வேலையை 12 மணி நேர வேலையாக மற்றும் தொழிலாளர் விரோத நடவ டிக்கையை உடனே திரும்பப் பெற வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்வாய்களை யும் போர்க்கால அடிப்படையில் எவ்வித முறைகேடுகளும் இன்றி தூர்வாரும் பணியை செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோ ரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கும்பகோணத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பி னர் பார்த்தசாரதி, நகரச் செயலாளர் செந்தில்குமார், நகர குழு உறுப்பி னர் ஆர்.ராஜகோபாலன், நாகராஜன், பழ.அன்புமணி ஆகியோர் பங்கேற்ற னர். தாராசுரம் பகுதியில் பி.எஸ்.சீனி வாசன் தலைமையில் ஏ.செல்வம், கே.ஆர்.சந்திரன், மணி சுப்புராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கும்பகோணம் ஒன்றியத்தில், ஒன்றிய செயலாளர் பி.ஜேசுதாஸ் தலைமையில் மாவட்டக் குழு உறுப்பி னர் நாகராஜன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் குணசேகரன், கலா வதி, கலையரசன், கலியமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, திருபுவனம் பகுதியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால் தலைமை யில், மாவட்டக் குழு உறுப்பினர் பக்கிரிசாமி, சேகர், நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் ஜீவபாரதி, சங்கர், கோவிந்தராஜ், கே.முருகேசன், வடிவேல், எஸ்.முருகேசன், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செய லாளர் பழனிவேல் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அரு ளரசன், ஒன்றியக் குழு உறுப்பினர் ஆறுமுகம், தருமையன் உள்ளிட் டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

;