கும்பகோணம், ஜூலை 20- தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய திருச்சேறை கிராமத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் தருமை யன் தலைமை வகித்தார். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலா ளர் ஆர்.ராஜகோபாலன், விவசாய தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் சி.நாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ் பழனிவேல். ஒன்றியக்குழு உறுப்பினர் டி.என்.ஆறுமுகம், கே.ரெங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.