தஞ்சாவூர் அருகே தோட்டக்காடு ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. முகாமில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 9 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 3 பேருக்கு விதவை உதவி தொகை, 4 பேருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை, 16 பேருக்கு விலையில்லா வீட்டுமனை, 13 பேருக்கு பட்டா மாறுதல் ஆணைகளையும், 10 பேருக்கு குடும்ப அட்டை, வேளாண்மை துறை சார்பில் 4 பேருக்கு வேளாண் இடுபொருட்கள் மற்றும் கருவிகள், தோட்டக்கலைத் துறை சார்பில் 4 பேருக்கு மானிய விலையில் கொய்யா, மாங்கன்றுகள் ஆகியவற்றை ஆட்சியர் வழங்கினார்.