tamilnadu

img

தலித் அல்லாதவர்களும் கரம் கோர்க்கும் போதுதான் தீண்டாமை ஒழிப்பு போராட்டம் வீரியமடைகிறது

கடந்த 2017-ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் தீண்டாமைச் சுவர் உடைக்கப்பட்ட நிகழ்வுதான் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவாகக் காணரம். தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய அநேகமான போராட்டங்கள் வெற்றியடைந்துள்ளது. அருந்ததியர்களுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு பெற்றுத் தந்திருக்கிறோம். தமிழகத்தில் 28 ஆலயங்களில் தலித்துகளுக்கு வழிபாட்டு உரிமையைப் பெற்றுத்தந்து இருக்கிறோம்.தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்துகின்ற போராட்டம் வெற்றியடைவதற்கு முக்கியக் காரணம் இந்தப் போராட்டங்களில் தலித் அல்லாதவர்களையும் பங்கெடுக்கச் செய்வதுதான். உத்தப்புரம் போராட்டத்தில் இரண்டாயிரம் பேர் பங்கெடுத்து இருப்பார்கள் என்றால் அதில் சரிபாதிப் பேர் சாதி ஒழிப்பில் அக்கறை கொண்ட தலித் அல்லாதவர்கள். இதர சாதியினரும் இணைந்து போராடும் போதுதான் அதற்கு ஒரு ஜனநாயக வடிவம் கிடைக்கிறது.இந்தியாவுக்கு விடுதலை என்றால் ஒடுக்கப்பட்டவர்களுக்கான விடுதலையும் இணைந்தே இருக்க வேண்டுமென 1930-லேயே முழங்கியவர்கள் கம்யூனிஸ்டுகள். தமிழகத்தில் 88 வகையான தீண்டாமை வடிவங்களும் 28 வகையான வன்கொடுமை வடிவங்களும் இருக்கின்றன. கிட்டத்தட்ட 40 வர்க்க - வெகுஜன அமைப்புகள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் இணைந்திருக்கின்றன. மேலும், பல்வேறு ஜனநயாக சத்திகளை இணைத்துக்கொண்டு தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களை வருங்காலத்தில் மேலும் வீரியத்துடன் தொடர்வோம்.

தீண்டாமை ஒழிப்பு மாநிலத் தலைவர் பி.சம்பத் ஆற்றிய தலைமை உரையிலிருந்து...

;