பழுதான சாலைகளை சீரமைக்க கோரிக்கை
தஞ்சாவூர், நவ.3-தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் மழையால் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீ ரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேராவூரணி அறிஞர் அண்ணா புதிய பேருந்து நிலையம் உள்ளே செல்லும் வழியிலும், பேருந்து வெளியே வரும் சாலையில் பெரிய பள்ளமாக உள்ளது. இருசக்கர வாக னத்தில் செல்பவர்கள் பள்ளத்தில் விழாமல் ஒதுங்கி செல்ல முயலும் போது எதிரில் வரும் வாகனத்தில் மோதி விபத்து ஏற்படுகிறது. அதே போல மழை பெய்து தண்ணீர் தேங்கு வதால் கனரக வாகனங்கள் செல்லும் போது இருசக்கர வாக னத்தில் செல்வோர் நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர். இதே போல பெரியார் சிலை அருகிலுள்ள வேகத்தடை யின் அருகில் குண்டும், குழியுமாக சாலை உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து வர்த்தக சங்க தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன் கூறுகையில், “சாலை குண்டும், குழியுமாக இருப்பது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார். வேகத்தடை அருகே அமைக்கப்பட்ட சாலை இரண்டே மாதத்தில் சேத மடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சாலையில் திரியும் மாடுகள்
திருநெல்வேலி, நவ.3-நெல்லை நகா்ப்புற மற்றும் சுற்றுப்புற சாலைகளில் ஏராளமான மாடுகள், எவ்வித கட்டுப்பாடுகளின்றி தினசரி சுற்றித் திரிகின்றன. மாடுகள் இரவு, பகல் பாராமல் எல்லா நேரங்களிலும், சாலையின் குறுக்கு நெடுக்காக சுற்றித் திரிவதால், சில சமயம் விபத்துகள் நடைபெறுகின்றன. சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை உடனடியாக அப்பு றப்படுத்த வேண்டும். மாடுகள் சாலையில் செல்வதால் ஒரு வித அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது. மேலும், சாலையில் மாடுகளை விடும் உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் தெரி வித்தனர்.