தஞ்சாவூர், ஜூன் 13- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் கடைகள் நடத்தி வருபவா்களில் பலர் கடந்த 4 ஆண்டுகளாக பேரூராட்சிக்கு வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்திருந்தனர். இதையடுத்து வாடகையை உடனே செலுத்த வேண்டும் என்று பேரூராட்சி அதிகாரிகள் அறிவித்து இருந்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை பேரூராட்சி செயல் அலு வலர் பி.பழனிவேலு உள்ளிட்ட அதிகாரிகள் வாடகை செலுத்தாத 24 கடைகளை பூட்டி சீல் வைத்தனா்.