தஞ்சாவூர், மே 10- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம் பட்டினம் நடுத்தெரு, வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சார்பில், பள்ளியில் பயிலும் பிலால் நகர், புதுத்தெரு, முத்தம்மாள் தெரு ஆகிய பகுதிகளின் ஏழை மாணவர்கள் 50 பேரின் குடும்பங்க ளுக்கு, ரூ 400 மதிப்பிலான மளிகை சாமான்கள் அடங்கிய நிவாரணப் பொருட்களை, தலைமை ஆசிரியர் எஸ்.மாலதி தலைமையி லான, ஆசிரியர்கள் வீடு தேடிச் சென்று வழங்கினர்.