தஞ்சாவூர் நவ.2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு தினம்- தமிழ் மொழி வளர்ச்சி கருத்தரங்கம் தஞ்சை நீதிமன்ற சாலை சரோஜ் நினைவகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மாநகரச் செயலாளர் ந.குருசாமி தலைமை வகித்தார் மாவட்ட குழு உறுப்பினர் இரா.புண்ணியமூர்த்தி வரவேற்புரையாற்றினார். இடைக்கமிட்டி செயலாளர்கள் ம.மாலதி, க.காந்தி, அ.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் மயிலை பாலு, மாவட்ட செயலாளர் கோ.நீலமேகம் ஆகியோர் கருத்துரையாற்றினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வெ.ஜீவகுமார், கி.பக்கிரிசாமி, பெ. செந்தில்குமார், வெ.கண்ணன், ஜெயபால், தமிழ்ச்செல்வி, மாவட்டக் குழு உறுப்பி னர்கள் க.அபிமன்னன், மு.பழனிஅய்யா, ம.ராம், நா.சரவணன், செ.இராஜன், கோ.அரவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக மாநகரக் குழ உறுப்பினர் சி.ராஜன் நன்றி கூறினார்.