tamilnadu

img

கடன் தொல்லையால் தற்கொலை ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்துக்கு நிவாரணம் ஆட்சியரிடம் சிஐடியு கோரிக்கை

தஞ்சாவூர், ஜூன் 17- தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட ஆட்டோ தொழிலாளி குடும்பத்தி ற்கு நிவாரணம் கேட்டு சி.ஜ.டி.யூ. சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  கும்பகோணம் ஸ்ரீ நகர் காலனியைச் சேர்ந்த ரகுபதி என்பவர், ரகுபதிக்கு கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் கடனையும் கட்ட முடியாமல், மகனின் மருத்துவச் செலவையும் பார்க்க முடியாமல் வேதனையடைந்து மன உளைச்சலுக்கு உள்ளான ரகுபதி, கடந்த ஜூன் 8 ஆம் தேதி அன்று கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவத்தை கேள்விப்பட்டு சி.ஜ.டி.யு. தஞ்சை மாவட்ட செயலாளர்  சி.ஜெயபால் மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு. கும்பகோணம் நகர செயலாளர் செந்தில், தலைவர் கார்த்தி, தஞ்சை மாநகர செய லாளர் எம்.சுரேஷ், நகர நிர்வாகி த.ஜோசப் மற்றும் என்.சாமிநாதன்  ஆகியோர் ரகுபதி யின்  குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல்  தெரி வித்தனர்.  பின்னர் உடனடியாக தஞ்சை மாவட்ட ஆட்சியரை சந்தித்து. வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாய் நிற்கும் ரகுபதி குடும்பத்திற்கு  அரசு உடனடியாக உதவி செய்திடவும், ரகுபதியின் குழந்தைகளின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு மருத்து வம், கல்வி உள்ளிட்ட செலவினங்களையும் அரசு  ஏற்க வேண்டியும், ரகுபதி வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்திட வலியுறுத்தி யும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

;