tamilnadu

img

மாணவர்களின்  விழிப்புணர்வு பேரணி

 தஞ்சாவூர் டிச.22- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஸ்டேட் பேங்க் எதி ரில் உள்ள ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப் பள்ளி யில், பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சி மற்றும் கோக னட் சிட்டி லயன்ஸ் சங்கம் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். “மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவல நிலையைப் போக்கிட” வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணிக்கு லயன்ஸ் சங்கத் தலைவர் நீலகண்டன் தலைமை வகித்தார். பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.தமிழ்வாணன், முன்னிலை வகித்தார்.  பள்ளி மாணவ, மாணவிகள், துப்புரவு பணியாளர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பன்னீர்செல்வம், பெருமாள், குமார், பள்ளி ஆசிரியர் சுபாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.