tamilnadu

நீரா பானம் விற்பனை தொடக்கம்

தஞ்சாவூர், பிப்.27- தென்னை விவசாயிகளின் நலன் கருதி, நீரா பானம் உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்வ தற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி யிருந்தது. அதன்படி, பேராவூரணி தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில், திருச்சிற்றம் பலத்தில் நீரா பானம் விற்பனை மையம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நிறுவனத்தின் சேர்மேன், வழக்குரைஞர் சீனிவா சன் தலைமை வகித்தார்.  மேலாண்மை இயக்குனர் துரை. செல்வம் முன்னிலை வகித்தார். பட்டுக்கோட்டை கோட்ட கலால் அலுவலர் மைதிலி நீரா பானம் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். பேராவூரணி வேளாண்மை உதவி  இயக்குனர் மாலதி, வேளாண் விற்பனை வணிக அலுவலர் தாரா உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பிருதிவிராஜ் நன்றி கூறினார்.