tamilnadu

img

திருமணத்திற்கு நிதியுதவி

தஞ்சை மாவட்டம் திருபுவனம் சோழன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் சிங். செல்வராஜ் ஏழை குடும்பங்கள் மற்றும் பொதுமக்களுக்கு கல்வி உதவி மருத்துவ உதவி உள்ளிட்ட நல உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் காங்கேயன் பேட்டை கழக முன்னோடி செல்வராஜ் மகள் திருமணத்திற்காக 75,000 மதிப்பிலான பட்டுப்புடவை சீர்வரிசைகளை திருபுவனம் நகரக் கழகச் செயலாளரும் சோழன் பட்டு கூட்டுறவு சங்க தலைவருமான சிங் செல்வராஜ் அவரது சொந்த நிதியில் வழங்கினார்.