tamilnadu

img

கூட்டாட்சி தத்துவத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் மோடி அரசு மீண்டும் வேண்டுமா? மதுக்கூர் ராமலிங்கம் கேள்வி

தஞ்சாவூர், ஏப்.15-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி காந்தி பூங்கா அருகே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தஞ்சைநாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேராவூரணி ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமாரசாமி தலைமை வகித்தார். தி.மு.க நகரச்செயலாளர் தனம் கோ.நீலகண்டன் வரவேற்றார். கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் பேசியதாவது, “கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி அரசு, நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர். அரசின் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கிறது மோடி அரசு. ஐந்து ஆண்டு காலம் பிரதம மந்திரியாக இருந்த மோடி, நாடாளுமன் றத்திற்கு குறைந்த நாட்கள் மட்டுமேவந்தார். மக்கள் பிரச்சனை பற்றி எதையும் பேசவில்லை. மான் கி பாத் என்றபெயரில் வானொலியில் பொய் மூட்டையை அவிழ்த்து விட்டார். மதச்சார்பற்ற இந்திய நாட்டை, மதச்சார்புடைய நாடாக மாற்ற முயற்சிக்கிறார்.மக்களிடையே சாதி, மதத்தின் அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.


காந்தியைகொன்ற சாவர்கருக்கு, நாடாளுமன்றத்தில் சிலை திறக்கின்றனர். மதஒற்றுமையை வலியுறுத்தி தீண்டாமைக்கு எதிராக, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடிய காந்தியை இழிவுபடுத்த முயற்சிக்கின்றனர். கௌரி லங்கேஷ், நரேந்திர தபோல் கர், கல்புர்கி போன்ற கொலை செய்யும், பாஜக, ஆர்எஸ்எஸ் கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வருவது நாட்டுக்கும், மக்களுக்கும் ஆபத்தானது” என் றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் ஆசிரியருமான கவிஞர்மதுக்கூர் இராமலிங்கம் பேசுகையில்,” இந்த தேர்தலில் யார் வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பது முக்கியம். எக்காரணம் கொண்டும் ஊதாரி, ஊர் சுற்றி மோடி மீண்டும் வந்து விடக் கூடாது. தப்பித் தவறி மோடி மீண்டும் வந்து விட்டால் இது தான் கடைசி தேர்தல். மீண்டும் தேர்தல் நடைமுறை வராதுஎன அவரது கட்சியைச் சேர்ந்த அருண்சோரி சொல்கிறார். 5 வருடமாக என்ன செய்யவில்லைஎன்று மோடி கேட்கிறார். அப்படி என்னசெய்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்த துரோகத்தைமறக்க முடியுமா. இன்றைக்கு மக்களுக்கு ஏதாவது என்றால் ஓடி வருவேன்என்று கூறுகிறார்.


தமிழக மக்கள், கஜா புயலில் சிக்கி தவித்த போது, நடிகையின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருந்தவர். ஏழைத் தாயின் மகன்என்று சொல்லிக் கொள்ளும் மோடியின் மகனின் காலை உணவு செலவு மட்டுமே ரூ1.25 லட்சம். தைவான் நாட்டில் இருந்து இதற்காக காளான் இறக்குமதி செய்யப்படுகிறது. நீங்கள் வாக்களிக்கும் ஒவ்வொருவாக்கும், உங்கள் பணத்தை வங்கியில் இருந்து எடுக்கவே வரிசையில்நிற்க வைத்து அலைக்கழித்தவர் களுக்கு எதிராக இருக்க வேண்டும். பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது வராத,அரசியல் கட்டமைப்பை சீர்குலைக் கக் கூடிய, மோடி மீண்டும் வர வேண்டுமா. தேர்தல் ஆணையம் மோடியின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் தருவதாக சொன்னார்கள். ஆண்டுக்கு 2 கோடி பேருக்குவேலை தருவதாக சொன்னார்களே... செய்தார்களா. நூறுநாள் வேலை திட்டத்தை சீரழித்தார்கள். திமுகதேர்தல் அறிக்கையில் விவசாயக் கடன், நகைக்கடன், மாணவர் கல்விக்கடன் ரத்து, உள்ளாட்சி தேர்தலைநடத்துவோம் என அறிவித்துள்ளனர். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் தருவதாக சொல்லி இருக்கின்றனர். நீட் தேர்வு ரத்து என அறிவித்துள்ளனர். 


மீண்டும் எட்டு வழிச்சாலை திட்டம் 

எட்டு வழிச்சாலைக்கு எதிராக வழக்கு போட்டது ராமதாஸ். அவரைமேடையில் வைத்துக் கொண்டே மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நீதிமன்றமே சொன்னாலும், மீண்டும் எட்டு வழிச்சாலை திட்டத்தை கொண்டு வருவோம் என்கிறார். தண் ணீரை விலைக்கு விற்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளனர். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு நாட்டை விற்று விட்டு செல்லும் சூழ்நிலையை மோடிஅரசு உருவாக்கி விட்டது. பெட்ரோல்விலையை ஏன் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மறுப்பது ஏன். சமையல் எரிவாயு விலையை பலமடங்கு உயர்த்தி விட்டனர். 13 பேர்சாவதற்கு காரணமாக இருந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தா நிறுவனத்திற்கு தஞ்சை மண்டலத்திலேயே 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளனர். இங்குள்ள மக்கள் அகதிகளாக வேறு மாவட்டத்திற்கு, வேறு மாநிலத்திற்கு செல்லும் நிலையை உருவாக்கி உள்ளனர். இது போன்ற அனைத்து திட்டங்களையும் ரத்து செய்து ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்போம் என திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.


ஜனநாயகத் திற்கு, கூட்டாட்சி தத்துவத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் மோடி அரசு மீண்டும் வர வேண்டுமா என்பதை யோசித்து வரவிருக்கும் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” இவ்வாறு மதுக்கூர்ராமலிங்கம் பேசினார். கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ், முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப.சேகர், இளைஞர் அணி ஆரோ அருள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பா.பாலசுந்தரம், பி.காசிநாதன், டி.பன்னீர்செல்வம்,மு.சித்திரவேல், இந்திய தேசிய காங்கிரஸ் கே.வி.கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வீ.கருப் பையா, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, நகரச் செயலாளர் வே.ரெங்கசாமி உள்பட கூட்டணிக் கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

;