tamilnadu

கயிறு தொழிற்சாலைகளில் தொடர் திருட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஆக.29- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் சிறியதும், பெரியதுமான சுமார் 150-க்கும் மேற்பட்ட கயிறு தொழி ற்சாலைகள் இயங்கி வருகின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 16  ஆம் தேதி வீசிய கஜா புயலால், கயிறு  தொழிற்சாலைகள் பலவும், முழுமையா கவும், பகுதியாகவும் சேதமடைந்தன. மேலும் இப்பகுதியில் லட்சக்க ணக்கான தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்தன. கஜா புயலு க்குப் பிறகு, தென்னை மரங்களில் குரு ம்பை பிடிப்பது குறைந்து, தேங்காய் உற்பத்தியும் வெகுவாக குறைந்தது. இதனால் கயிறு தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருளான தேங்காய் மட்டைகளுக்கு தட்டு ப்பாடு நிலவுகிறது. கயிறு தொழிற்சா லைகளில், வேலை செய்து வந்த வெளி மாநிலத் தொழிலாளர்களும் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த மாநிலம் திரும்பி விட்டனர்.  இந்நிலையில், தற்போது 22  மாதங்கள் கடந்த சூழலில், வங்கிகள்  மற்றும் தனியாரிடம் கடன் பெற்று,  கயிறு தொழிற்சாலைகள் மறுநிர்மானம்  செய்யப்பட்டு இயங்கி வருகிறது.  இந்நிலையில் கயிறு தொழிற்சாலை களை குறிவைத்து திருட்டு சம்பவ ங்கள் நடைபெற்று வருவது உரிமை யாளர்களிடையே அச்சத்தையும், மன வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.

 வெள்ளிக்கிழமை இரவு, குமணன் என்பவரது கயிறு தொழிற்சாலையில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தார்பாய், டிரா க்டரில் இருந்த ரூ.7 ஆயிரம் மதிப்பி லான பேட்டரியை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதேபோல் கடந்த சில நாட்களாகவே, கோல்டன் பைபர் தொழிற்சாலையில் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான தார்பாய், பெருமாள் என்பவரது கயிறு தொழிற்சாலையில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 2 தார்பாய், சித்தாதிக்காடு பகுதியில் உள்ள  கயிறு தொழிற்சாலையில், ரூ.20 ஆயி ரம் மதிப்பிலான 2 தார்பாய், மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான சோலார் செட், பேட்டரி ஆகியவையும் திருடப்பட்டு உள்ளது. இதேபோல் பல இடங்களில் கயிறு தொழிற்சாலைகளை குறிவைத்து ஒரு  கும்பல் திருட்டு வேட்டையாடி வருகிறது. இதுகுறித்து, பேராவூரணி காவல்நி லையத்தில், புகார் அளித்துள்ள, பேரா வூரணி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் குமணன் கூறுகையில்,, “கஜா புயலால் பெரும் இழப்பைச் சந்தி த்து, அதிலிருந்து ஓரளவு மீண்டு வரும்  நிலையில், கொரோனா பெருந்தொற்று தொழிலை மீண்டும் முடக்கி விட்டது.  இதனால் பேராவூரணி, பட்டுக்கோ ட்டை, மதுக்கூர், ஆலங்குடி மற்றும் சுற்று  வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த, ஆயி ரக்கணக்கான கயிறு தொழிற்சாலைகள் நடத்தி வருவோர், கடுமையாகப் பாதி க்கப்பட்டுள்ளோம்.  தற்போது தொழில் தொடங்கி  ஆயிரக்கணக்கான தொழிலாளர்க ளுக்கு வேலை வழங்கி வரும் நிலை யில், தொடர் திருட்டு நடைபெற்று வரு வது, கடும் இழப்பையும், அச்சத்தை யும் ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து  காவல்துறையில் புகார் அளிக்க ப்பட்டுள்ளது. காவல்துறையினர் தனி க்கவனம் செலுத்தி, திருட்டுக் கும்பலை  கைது செய்ய வேண்டும்” என்றார்.

;