தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் தாய்மொழி நாள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ் வழி கல்வி இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளராக மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், பேராவூரணி ஒன்றிய அமைப்பாளராக த.பழனிவேல், நகர அமைப்பாளராக சி.முருகேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கூட்டத்தில், “அரசே கல்வியை வழங்க வேண்டும். தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழ்வழியில் கல்வியை வழங்க வேண்டும். தமிழ் வழியில் கல்வி கற்றவர்களுக்கு உயர் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளை தரமான கட்டமைப்பில் அரசு நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. நிகழ்வில், தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் மாநில அமைப்பாளர் சின்னப்பத் தமிழர் தலைமை வகித்தார். பணிநிறைவு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கணே.மாரிமுத்து, ஆசிரியப் பயிற்றுநர் சாஜிதா பானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.