tamilnadu

பஞ்சனூரணி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சரி செய்க! விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூர், ஆக.11- தஞ்சாவூர் மாவட்டம், பூத லூர் தாலுகா செங்கிப்ப ட்டி ஊராட்சி வன்னியம்பட்டி யில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கிளை அமைப்பு மற்றும் கொடி ஏற்றும் நிக ழ்ச்சி, கிராம மக்கள் அனை வரது பங்கேற்போடு நடை பெற்றது. இதில் கிளைத் தலை வராக பன்னீர்செல்வம், செயலாளராக சசிகலா, பொருளாளராக தர்மராஜ் ஆகியோர் தேர்வு செய்ய ப்பட்டனர்.  நிகழ்ச்சியில், மா ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ. நீலமேகம், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செய லாளர், என்.வி.கண்ணன், சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பா ஸ்கர், வி.ச.ஒன்றியத் தலை வர் கே.தமிழரசன், பூதலூர் வடக்கு ஒன்றியத் தலைவர் உதயகுமார், மாதர் சங்கம் ஒன்றியத் தலைவர் எஸ். மலர்கொடி, சிஐடியு மா வட்டக்குழு உறுப்பினர் எஸ். விஜயகுமார் மற்றும் வி.ச  நிர்வாகிகள், கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.  “வன்னியம்பட்டி பாசன பஞ்சனூரணி ஏரிக்கு, தண்ணீர் வரும் பாசன  வாரி மற்றும் விவசாயப் பணி களுக்கு பயன்பாட்டில் உள்ள  சாலையில், தனியாரால் செய்யப்பட்டுள்ள ஆக்கி ரமிப்புகளை உடனே அகற்றி  விவசாய பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;