tamilnadu

img

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை

 தஞ்சாவூர், செப்.8- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி ஆதனூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்காக கொசுப் புழு ஒழிப்பு பணி நடைபெற்றது. இப்பணியை வட்டார மருத்துவ அலுவலர் வி.செளந்தரராஜன் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.சந்திரசேகரன் துப்பு ரவு ஆய்வாளர் தமிழ்வாணன் ஆகியோர் பார்வையிட்டனர். தற்போது பருவமழை துவங்கி உள்ளதால், ஆங்காங்கே நீர் தேங்க வாய்ப்புள்ளது. எனவே சேமித்து வைக்கும் நீரை மூடி வைக்க வேண்டும். வீட்டைச் சுற்றி நீர் தேங்கக் கூடிய பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். கொசுப்புழு கண்ட றியப்பட்ட நீரை வடிகட்டியோ அல்லது நீரை வெளியேற்றியோ கொசுப்புழுக்களை அழிக்க வேண்டும்.குழி வெட்டி குடிநீர் பிடிக்க வேண்டாம். கொசுப்புழு ஒழிப்பு பணிக்காக வீடு தேடி வரும் பணியாளர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண் டும் என வி.செளந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

;