கோவை, மார்ச் 10 - கேரளாவில் பறவை காய்ச்சல் பரவலை தொடர்ந்து தமிழக - கேரள எல்லையான கோவையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு எதிரொலியால்,அவை தமி ழகத்தில் பரவாமல் தடுப்ப தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கோவையில் கால்நடை நோய்தடுப்பு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லைகளாக உள்ள 12 இடங்களில் அதிகாரிகள் சோதனை மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் 5 இடங்களிலும், பொள்ளாச் சியில் 7 இடங்களிலும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. மேலும், 12 இடங்களிலும் 24 மணி நேரம் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கோழி, முட்டை, தீவனம், கோழிக்கழிவுகள் கொண்டு வருவது தீவிர மாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.