tamilnadu

img

சோழபுரத்தில் மக்கள் குறைதீர் முகாம்

 கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் 50க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. கும்பகோணம் வட்டாட்சியர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். தனி வட்டாட்சியர்கள் முருகவேல், உஷா, நிலவள வங்கி தலைவர் அறிவழகன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மகாலிங்கம், துணை தலைவர் அழகு.த.சின்னையன் நவீன வேளாண்மை குழு தலைவர் ஆசாத்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்க ளிடம் இருந்து பெறப்பட்டன. தகுதியுள்ள மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட் டது. முகாமில் கிராம நிர்வாக அலுவலர் சையது சாஜிதா பர்வீன் வருவாய் அலுவலர் சித்ரா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.