tamilnadu

img

ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்  

தஞ்சாவூர் அக்.31- தஞ்சையில் சுதந்திர போராட்ட தியாகிகள் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில் புதன்கிழமை அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், “சுதந்திர போராட்ட தியாகிகள் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் 50 நபர்கள் கலந்து கொண்டனர். இதில், மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், வாரிசுதாரர்களுக்கு அடையாள அட்டை, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, சுயதொழில் தொடங்குவதற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வட்டி இல்லா கடன் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 25 மனுக்கள் அளிக்கப்பட்டன. கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட கருவூல அலுவலர் சோமசுந்தரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயலட்சுமி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.