tamilnadu

img

வானொலி நிலைய நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் உற்சாகம்

தஞ்சாவூர், மார்ச் 11- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே  பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி மாணவர்கள் 23 பேர் திருச்சி வானொலி நிலைய நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். கடந்த மார்ச் 3 அன்று 23 மாண வர்கள் பள்ளி இடைநிலை ஆசிரியர் செ.இராம நாதன் தலைமையில்  திருச்சி வானொலி நிலையத்திற்கு சென்றனர். அப்போது ஒட்ட ங்காடு ஒன்றியக்குழு கவுன்சிலர் பாக்கியம் முத்துவேல், பள்ளி மேலாண்மைக் குழு  தலைவி சுதா உடனிருந்தனர். பள்ளியின் தலை மையாசிரியர் வீரம்மாள் மற்றும் பெற்றோ ர்கள், அனைவரையும் வழியனுப்பி வைத்தனர். திருச்சி வானொலி நிலையத்திற்கு சென்ற  மாணவர்கள் பாட்டுப் பாடுதல், நீதிநெறிக் கதைகள் சொல்லுதல், பழமொழிகள் மற்றும்  நாடகம், விடுகதை, டெங்கு விழிப்புணர்வு உறு திமொழி கூறுதல், தமிழ் ஆண்டுகள் 60-ஐ ஒப்புவித்தல், திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற தங்கள் தனித்திறமைகளை வெளிப்ப டுத்தினர். தொடர்ந்து 5 மணி நேரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் ஒரு மணிநேரம் தொடர் நேரலை நிகழ்ச்சியிலும் பங்கேற்ற னர். இதேபோல் மணிமலர், அரும்புகளின் குறு ம்புகள், கவிதை வாசிப்பு, எனும் தலைப்பு களில் நிகழ்ச்சிகளை வானொலி நிலை யத்தில் பதிவு செய்து கொண்டனர். பதிவு செய்த அனைத்து நிகழ்ச்சிகளும் வருகிற வார த்தில் நேயர்களுக்கு வானொலியில் பகிரப்ப டும் என தெரிவித்தனர். மாணவர்கள் வானொலி நிலைய நிகழ்ச்சியில் பங்கேற்ற தை, நேரில் கண்ட பெற்றோர்களும் மகிழ்ச்சி  அடைந்தனர்.

;