tamilnadu

img

ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியை ஸ்மார்ட் பள்ளியாக மாற்றக் கோரிக்கை

கும்பகோணம், மார்ச் 3- தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் கூட்டம் ஒன்றிய தலைவர் சுபா திருநாவுக்கரசு தலைமையில் நடை பெற்றது.  ஏற்றார்.  ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் குழு ஒன்றிய உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள்  கலந்து கொண்டனர். அப்போது நாச்சியார்கோவில் பகுதி  (16ஆவது) வார்டு உறுப்பினர் தமிழரசி குப்புசாமி பேசும்பொழுது, திருவிடை மருதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நாச்சியார்கோவில் ஊராட்சியில் அண்ணா மாளிகை பழுது நீக்கம் எப்போது நிறைவேறும்? மிக மந்தமாக பணி நடைபெற்று வருவதால் பொது மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள் ளது. விரைந்து பணிகளை முடித்து திரு மண நிகழ்வுகளை பதிவு செய்ய ஆவன செய்ய வேண்டும். அண்ணா மாளிகையை பதிவு செய்வதற்கு திருவிடைமருதூர் வரை வந்து செல்வதற்கு பொதுமக்கள் மத்தி யில் அதிருப்தி உள்ளது. அதனை களைந்திட அண்ணா மாளிகையை ஆன்லைனில் பதிவு செய்யும் முறையை உருவாக்க வேண்டும். அண்ணா திரு மண மாளிகையில் வருவாயில் 50 சத வீதத்தை நாச்சியார்கோவில் ஊராட்சி யின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்து தர வேண்டும். நாச்சியார்கோயில் ஊராட்சியில் மேலவீதி வல்ல மங்கலம் சாலை மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு நிர்வாகம் அனுமதி வழங்கப் பட்டு விட்டது. ஆனால் பணி துவங்கப் படவில்லை. ஆகவே அப்பகுதியில் திரு விழா துவங்க உள்ளதால் உடனடியாக பணியை நிறைவேற்றி தர வேண்டும். நாச்சியார்கோவில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கடந்த 1969 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது மிகவும் பழுதடைந்துள்ளது. எனவே பள்ளியை நவீனப்படுத்தி  ஸ்மார்ட் பள்ளியாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அரசு நலத் திட்டத்தில் வழங்கப்படும் இருசக்கர வாகன மானியம்,  தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை  ஆகியவை காலதாமதமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படு கிறது. குறிப்பாக தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் பயனாளிகள் 5 ஆண்டு காலமாக தொகை கிடைக்காமல் சிர மத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு பயனாளிகளுக்கு  சில தொகை  விரைவில் கிடைத்திட நடவடிக்கை வேண்டும் என்பன உள்ளிட்ட கோ ரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 

;