tamilnadu

img

பேராவூரணி அரசுப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித் தரக் கோரிக்கை

 தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் முதன்மைச் சாலையில் உள்ளது ஊராட்சி ஒன்றிய (கிழக்கு) தொடக்கப்பள்ளி. நூற்றாண்டுக் காண உள்ள இந்தப் பள்ளி பழைய ஓட்டுக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. 110 மாண வர்களுடன் 5 வகுப்புகள் உள்ள இந்தப் பள்ளிக்கு 4 வகுப்பறை கள் மட்டுமே உள்ளன.   பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கழக உயர்நிலை பள்ளி எனப் பேராவூரணியில் முதன்முத லாகத் தொடங்கப்பட்ட இப்பள்ளி, கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான கல்வியாளர், மருத்துவர், முற்போக்குச் சிந்தனையாளர்களை உருவாக்கிய இந்தப் பள்ளி மழைக் காலங்களில், தண்ணீர் ஒழுகும் ஓட்டுக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அரசு தொடக்கப் பள்ளிகளில் அதிக மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளியாக இப்பள்ளி திகழ்ந்தாலும் உரிய கட்டட வசதி இன்றி உள்ளது. இந்நிலையில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் த.பழனிவேல், தலைமையாசிரியர் பாலச்சந்தர், உதவி ஆசிரியர் சுபாஷ், நிர்வாகக் குழு உறுப்பினர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் ஆகியோர் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர்  மா.கோவிந்தராசுவைச் சந்தித்துப் பள்ளிக்குப் புதிய கட்டிடம் கட்டித் தரக் கோரிக்கை வைத்தனர். பள்ளியின் முன்னாள் மாணவரான சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக்கான புதிய கட்டிடத்தைக் கட்டித்தர உரிய முயற்சி செய்வதாக உறுதியளித்தார்.

;