tamilnadu

img

விளையாட்டுப் போட்டிகளில்  மூவேந்தர் பள்ளி சாதனை

தஞ்சாவூர் அக்.3- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பேராவூரணி வட்டார அள விலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர். குழு விளையாட்டுப் போட்டிகளான வாலிபால்,  த்ரோ-பால், ஹேண்ட்-பால், கோ-கோ  இறகுப்பந்து போன்ற போட்டிகளில் கீழோர் மேலோர், மேன்மேலோர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தடகளப் போட்டியில் மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மேலோர், மேன் மேலோர் தனிநபர் சாம்பியன் ஷிப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.  விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பள்ளியின் தாளாளர் வழக்கறிஞர் வி.ஏ.டி.சாமி யப்பன் பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். இந்நிகழ்வில் பள்ளி முதல்வர் சம்பத், துணை முதல்வர் சரோஜா, நிர்வாக அலுவலர் பிலவேந்திர ராஜ், அறங்கா வலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோ ர்கள் கலந்து கொண்டனர்.