tamilnadu

மே தினக் கொடியேற்று விழா

தஞ்சாவூர், மே 8-தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம், ஆவிக்கோட்டையில், மே தினம் மற்றும் மறைந்த தோழர் எஸ்.ரெங்கசாமி நினைவு தின கொடியேற்று விழாசெவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆவிக்கோட்டை பேருந்து நிலையம் மற்றும் ஆவிக்கோட்டை அண்ணா நகரில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில், எஸ்.எம். துரைக்கண்ணு, சி.காசிநாதன் ஆகியோர் தலைமையேற்றனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி, மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் வை.சிதம்பரம் ஆகியோர் கொடியேற்றி சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே.லெட்சுமணன், எம்.அய்யநாதன், மாதர் சங்க ஒன்றியபொறுப்பாளர் சி.கலாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.