tamilnadu

தஞ்சாவூர், அரியலூர் முக்கிய செய்திகள்

தஞ்சையில் கொட்டித் தீர்த்த மழை 

 தஞ்சாவூர் டிச.1- கடந்த 2 தினங்களாகதஞ்சை மாவட்டத்தில் மழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்ச மாக அணைக்கரையில் 101.40 மி.மீட்டரும், குறைந்தபட்சமாக கல்லணையில் 38.30 மி. மீட்டரும் மழை பெய்துள்ளது.  ஞாயிறு காலை 8 மணி வரை யிலான மழையளவு விவரம் வருமாறு (மி.மீ) தஞ்சாவூர் 55, வல்லம் 69, குருங்குளம் 48, திருவையாறு 51, பூதலூர் 48.80, திருக்காட்டுப்பள்ளி 41.80, கல்லணை 38.30, ஒரத்தநாடு 50.20, நெய்வாசல் தென்பாதி 70.20, வெட்டிக்காடு 95.80, கும்ப கோணம் 59, பாபநாசம் 57, அய்யம்பேட்டை 54, திருவிடை மருதூர் 58, மஞ்சளாறு 65, அணைக்கரை 101.40, பட்டுக் கோட்டை 84.60, அதிராம்பட்டினம் 82.50,  ஈச்சன்விடுதி 42.40, மதுக்கூர் 84.80, பேராவூரணி 52  மி.மீ என மாவட்டம் முழுவதும் 1308.80 மி.மீ மழையளவு பதி வாகியுள்ளது.  தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள் ளது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. கனமழை காரணமாக மீனவர்கள் கடலு க்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

குழந்தை திருமணம்: பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்கு

தஞ்சாவூர் டிச.1- திருவையாறு அருகே சிறுமி க்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் உள்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  தஞ்சையை அடுத்த கரந்தை பகுதியை சேர்ந்த கவிதா- ஸ்ரீதர் ஆகியோரின் 15 வயது மகளு க்கும், திருவையாறு அடுத்த ஆவி க்கரையை சேர்ந்த மதியழகன்- கலாராணி ஆகியோருடைய மகன் பிரபாகரன்(35) என்ப வருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.  தற்போது 15 வயது சிறுமி ஆறு மாத கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் மாவட்ட குழந் தைகள் நல பாதுகாப்பு அலு வலக சமூக பணியாளர் சுகந்த வல்லி திருவையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமி திருமணம் சம்பந்தமாக புகார் செய்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் ஆய்வா ளர் மனமல்லி குழந்தைகள் திரு மணச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கவிதா, ஸ்ரீதர், மதி யழகன், கலாராணி, பிரபாகரன் ஆகிய 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, பிரபாகரனை கைது செய்து மற்ற 4 பேரை தேடி வரு கின்றனர்.

இடிந்து விழும் நிலையில் பேருந்து நிலைய மேற்கூரை 

அரியலூர், டிச.1- அரியலூர் பேருந்து நிலை யத்தில் தற்போது பெய்து வரும் மழையில் பயணிகள் மீது எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் மேற்கூரைகள் உள்ளன. மிகவும் ஆபத்தான சூழலில் பேருந்து நிலையத்தில் பயணிகள் மழைக்கு கூட ஒதுங்க பயந்து மழையில் நினைந்தவாறு உள்ளனர். மேலும் பேருந்திற்குள் மழைநீர் ஒழுகிறது. எனவே பயணிகள், பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரிய லூர் ஒன்றிய செயலாளர் துரை  அருணன் மாவட்ட ஆட்சிய ருக்கு கோரிக்கை மனு அளித் துள்ளார்.