tamilnadu

img

ஏழை மக்களை பாதிக்கக் கூடிய மத்திய நிதி நிலை அறிக்கையை கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

.தஞ்சாவூர், பிப்.18- பொதுத்துறை நிறுவனங்களை தனியா ருக்கு தாரை வார்க்கக் கூடாது. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். மக்கள் விரோத, தேச நலனை பாதிக்கும் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி போன்ற சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். விவசாய, கல்விக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான, ஏழை மக்களை பாதிக்கக் கூடிய நிதி நிலை அறிக்கையை கண்டித்தும், தஞ்சை மாவட் டத்தில் திங்கள்கிழமை மாலை பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் பி.கிருஷ்ண மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநக ரச் செயலாளர் என்.குருசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஐ ஒன்றியச் செயலா ளர் டி. கணேசன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி. செந்தில்குமார், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வா கக் குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.அபிமன்னன், என். சர வணன், சிஐடியு மாவட்டத் தலைவர் து. கோவிந்தராஜ், சிபிஎம் ஞானமாணிக்கம், ஹெச்.அப்துல் நசீர், வடிவேலன், சி.ராஜன், வசந்தி, சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட பொருளாளர் பால சுப்பிரமணியன், முத்துக்குமரன், சி.கிருஷ் ணன் கலந்து கொண்டனர்
மதுக்கூர் 
மதுக்கூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வை.சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் எம்.பாரதிமோ கன் ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ஆர். சி.பழனிவேலு கண்டன உரையாற்றினார்.  சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். காசிநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே. லெட்சுமணன், எம்.அய்யநாதன், ஏ.கிருஷ் ணன், எம்.ராமசாமி, சின்னப்பொண்ணு, எஸ். சுப்பிரமணியன், மாதர் சங்க ஒன்றிய செயலா ளர் சி.கலாவதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் துரைராஜ், பி.இராமச்சந்திரன், எம்.செல்வம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.
பூதலூர் 
பூதலூர் நான்கு ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சி. பாஸ்கர், வடக்கு ஒன்றியச் செயலாளர் கே. காந்தி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநி லக் குழு உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  வடக்கு ஒன்றிய சிவசாமி, முருகேசன், மெய்யழகன், ஸ்ரீதர், தெற்கு ஒன்றிய ஏ. ரமேஷ், கே.பழனிச்சாமி, கே.மருதமுத்து, கே. தமிழரசன், எஸ்.வியாகுல தாஸ், எல்.ராஜாங்கம், எஸ்.மலர்கொடி, பி.சித்திரவேல், இ.முகமது சுல்தான், கே.ராஜகோபால், என். வசந்தா, வி.அஞ்சலிதேவி, ஆர்.கோவிந்த ராஜ், பி.ராஜூ, ஊராட்சி உறுப்பினர் எம்.ஜி. சரவணன், பி. பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருவையாறு 
திருவையாறு தேரடித் தெருவில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் தங்க.சக்கர வர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஏ.ராஜா ஆகியோர் தலைமை வகித்தனர்.  சி.பி.எம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்  பி.செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் எம்.ராம், எம்.பழனி அய்யா, விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஆர். பிரதீப் ராஜ்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வீர மோகன், ஆர்.தில்லைவனம், மாவட்டக் குழு எஸ்.பரிமளா, விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் டி.நித்யானந்தம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.
தாராசுரம்
கும்பகோணம் ஒன்றியம் தாராசுரம் பகுதி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பி.ஜே.ஜேசுதாஸ், சிபிஐ கட்சி ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் தஞ்சை மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர். மனோகரன், மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜன், நகர குழு செல்வம், சிபிஐஎம்எல் மாவட்ட குழு மாசிலா மணி ராயப்பன், பூபதி, வசந்தி வாசு மாண வரணி அமைப்பாளர் எஸ். செந்தில் உள்ளிட் டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கும்பகோணம்
கும்பகோணம் தலைமை தபால் நிலை யம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நகரச் செயலாளர் செந்தில்குமார், சிபிஐ நகர செயலாளர் மதியழகன் தலைமை வகித்தனர். சிபிஐ மாவட்ட செயலாளர் மு.அ. பாரதி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை. பாண்டியன், மாவட்ட குழு உறுப்பி னர் பார்த்தசாரதி, சிபிஎம்எல் மாவட்ட குழு உறுப்பினர் மாசிலாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவிடைமருதூர்
திருவிடைமருதூர் கடைத் தெருவில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் திருவிடை மருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜீவ பாரதி, சிபிஐ ஒன்றிய செயலாளர் மணி மூர்த்தி, சிபிஐஎம்எல் மாவட்ட குழு உறுப்பினர் முனி யப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் பக்கிரிசாமி நாகேந்திரன், சேகர், சிபிஐ ஒன்றிய செயலா ளர் ராமலிங்கம், சிபிஎம் எம்எல் சீனிவாசன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாச்சியார்கோயில்
நாச்சியார்கோயில் கடைத்தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் திரு விடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பழனிவேல், சிபிஐஎம்எல் மாவட்ட குழு உறுப்பினர் தவசெல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் சின்னை. பாண்டியன், அருள ரசன் சிபிஐஎம்எல் மாணவரணி செந்தில் குமார் நாச்சியார்கோவில் கிளை செயலா ளர் பார்த்திபன், ஒன்றியக்குழு உறுப்பினர் கள் தருமையன் ஆறுமுகம் ரங்கசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர்.

;