tamilnadu

img

மத்திய நிதி நிலை அறிக்கையை கண்டித்து விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்: விவசாயத் தொழிலாளர்களின் நலன்களை காவு கொடுக்கும் மத்திய நிதி நிலை அறிக்கையை கண்டித்து, தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விதொச மாவட்ட தலைவர் ஆர்.வாசு தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.அபிமன்னன் முன்னிலை வகித்தார். மாநிலச் செயலாளர் எம்.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிர்வாகிகள் வெ.ஜீவகுமார், சி.நாகராஜன், ஏ.மாலதி, கே.மருதமுத்து, எம்.சம்சுதீன், ஏ.உமாபதி, ஏ.செல்வராஜ், சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜூ, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பி.செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.