tamilnadu

img

சர்வதேச பெண்கள் தின விழா

தஞ்சாவூர், மார்ச் 8- தஞ்சாவூரில், சாதனையாளர் களுக்கு பாராட்டு விழா அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டக் குழு சார்பில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்றது. சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலைச் செல்வி தலைமை வகித்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ஆர்.மனோகரன் சிறப்புரை யாற்றினார். மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத் தாய், மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், போதையற்ற தமிழகம், புதுச்சேரி, வன்முறையற்ற தமி ழகம் புதுச்சேரி என்கிற முழக் கத்தை முன்வைத்த, மாதர் சங் கம் சார்பிலான நடைபயணத் தில் 10 நாட்கள் பங்கேற்ற சகோ தரிகளுக்கும், உள்ளாட்சித் தேர்த லில் போட்டியிட்டவர்கள், மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கும், சாதனையாளர்கள் பாராட்டு விழாவாக நடைபெற்றது.