tamilnadu

காவல்துறை வாகனங்கள் ஆய்வு

தஞ்சாவூர், டிச.23- தமிழகத்தில் காவல் துறையினர் பயன்படுத்தும் வாகனங்கள், கருவிகள், பாதுகாப்பு உபகரணங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஏராளமானவற்றை ஆண்டு தோறும் ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி தஞ்சாவூர் ஆயுதப்படை மைதா னத்தில், வருடாந்திர ஆய்வு ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. இதையொட்டி காவல்துறையினர் பயன் படுத்தும் வாகனங்கள் வரி சையாக நிறுத்தி வைக்கப்பட் டிருந்தன.  மேலும் அந்த வாக னங்கள் முன்பு வாகனங்க ளின் கருவிகள், பதிவேடுகள் உள்ளிட்டவைகள் வைக்கப் பட்டிருந்தன. இவற்றை தஞ்சாவூர் சரக காவல் துறை துணைத் தலைவர் ஜெ.லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் ஆகி யோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  இந்த ஆய்வில் வாகனங்களில் குறைகள் ஏதும் இருந்தால் உடனடி யாக அதனை சரி செய்ய வேண்டும் என்று உத்தர விட்டனர்.