tamilnadu

img

தஞ்சையில் மேடை நடனக் கலைஞர்கள் நூதன போராட்டம்....

தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் மேடை நடனக் கலைஞர்கள் மற்றும் ஒலி, ஒளி அமைப்பாளர்கள் வெள்ளிக்கிழமை பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கொரோனா பரவல் காரணமாக, திருவிழா, மேடை நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் கோவில் திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் கிராமிய கலைஞர்கள், மேடை நாடக கலைஞர்கள், அதைச்சார்ந்த தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தி னர் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், முதல்வருக்கு மனுக்களை அனுப்பி னர். 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பாக, தஞ்சாவூர் மாவட்ட மேடை நடனக் கலைஞர்கள் மற்றும் ஒலி, ஒளி அமைப்பாளர்கள் இணைந்து கையில் உண்டியலுடன் பிச்சை எடுக்கும்நூதனப் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்குத் தலைவர் தர்மலிங்கம், செயலாளர் சதீஸ் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். அப்போது, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, பிச்சை எடுக்கும் நிலையில்மேடை கலைஞர்கள் இருப்பதால், உரிய நிவாரணம் அரசு வழங்க வேண்டும் என முழக்கமிட்டு, அவ்வழியாகச் சென்ற பொதுமக்களிடம் பிச்சை எடுத்தனர். பின்னர், தலைவர் தர்மலிங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 2018-ல் கஜா புயல், 2019-ல் நாடாளுமன்ற தேர்தல், 2020-ல் கொரோனா ஊரடங்கு என ஏற்கனவே மூன்றுஆண்டு வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டது. இந்நிலையில், இந்தாண்டும்கொரோனா பரவல் காரணமாகக்  கலைஞர்களின் நிலைமை மோசமாகி விட்டது. பொது இடங்களில் இரவு 7 முதல் 10 மணி வரை நிகழ்ச்சி நடத்தஅனுமதி இருந்தும், இரவு ஊரடங்கால் அதுவும் நடத்த முடியாமல் போய்விட்டது. அரசு எங்களின் வாழ்விற்காக கலைப் பண்பாட்டு துறையில் உறுப்பினர்களாகப் பதிவு செய்து, கிராமிய கலைஞர்களுக்கு வழங்குவது போல, நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். 

;