தஞ்சாவூர், ஆக.19– டெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கடந்த 13ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 17ஆம் தேதி தஞ்சை மாவட்டம் கல்ல ணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளி டம் ஆறுகளில் தலா ஆயிரம் கன அடியும், கல்லணை கால்வாயில் 500 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் கடலுார் மாவட்டங்களில் 10 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கல்லணையிலிருந்து குறைந்தது 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்தால் தான், கடைமடை வரை தண்ணீர் செல்லும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் திங்கள்கிழமை காலை நில வரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 34,933 கன அடியாக வந்தது. இதையடுத்து 10 ஆயிரம் கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டது. இதை தொடர்ந்து கல்லணையிலி ருந்து வினாடிக்கு காவிரியிலிருந்து 2,632 கன அடியும், வெண்ணாற்றில் 2,333 கன அடியும், கொள்ளிடத்தில் 3,004 கன அடியும் மற்றும் கல்லணை கால்வாயிலிருந்து 1,055 கன அடியும் என 9,024 தண்ணீர் திறப்பு அதி கரிக்கப்பட்டுள்ளது.