tamilnadu

தஞ்சை மாவட்டத்தில் 90 ஆயிரம் கொரோனா பரிசோதனை: ஆட்சியர்

தஞ்சாவூர், ஆக.8-- மற்ற மாவட்டங்களைக் காட்டிலும், இதுவரை அதிக அளவில் 90 ஆயிரம் பரிசோ தனைகள் செய்யப்பட்டுள்ளன என்றார் தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ்.  இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் தினந்தோறும் சாரா சரியாக 1,200 கொரோனா நோய்த்தொ ற்றுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிகமான வகையில், 90 ஆயிரம் பரிசோ தனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளன.  கொரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோ தனைகள் அரசின் சார்பில் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவ ட்டத்தில் இதுவரை 3,484 நபர்களுக்கு கொரோ னா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு ள்ளது. அவர்களில் 2,564 நபர்கள் சிகிச்சை  பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ள னர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைவது 75 சத வீதமாக உள்ளது. இதற்கு சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த அலுவ லர்களின் கடின உழைப்பே காரணமாகும்.  

வல்லம், கும்பகோணம், பட்டுக்கோ ட்டை ஆகிய இடங்களில் அமைந்துள்ள கொ ரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெறு பவர்களுக்கு சத்தான உணவு, கபசுர குடி நீர், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள், முட்டை, வாழைப்பழம் போன்ற உணவுக ளும், சித்த மருந்துகளும் வழங்கப்பட்டு வருகி றது. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் காய்ச்சல்  கண்டறியும் முகாம்கள் முழு வீச்சில் நடை பெற்று வருவதால் கொரோனா தொற்றுடை யவரை எங்களால் எளிதில் அடையாளம் காணமுடிகிறது. கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்படுபவர்களுக்கு ஆதரவாக இருந்தால் மட்டுமே, அவர்கள் விரைவாக குணமடைந்து மீண்டு வர முடியும். எவ்வித தயக்கமும் இன்றி சேவை மனப்பான்மையு டன், பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவி லியர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்  பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

;