tamilnadu

வாக்காளர்களுக்கு ‘தாராள கவனிப்பு’: கடையை மூடினாலும் ஊரெங்கும் மதுவின் நெடி

தஞ்சாவூர், டிச.28- தஞ்சை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக, பேராவூரணி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 30- ஆம் தேதி திங்கள் கிழமை நடைபெற உள்ளது.   ஒன்றியத்தில் உள்ள 26 ஊராட்சிகளில், போட்டி யின்றி தேர்வான அலிவலம் ஊராட்சி தவிர 25 சிற்று ராட்சிகளுக்கும் பேராவூரணி ஒன்றியக்குழுவின் 15 உறுப் பினர் பதவி இடங்களுக் கும், மாவட்ட ஊராட்சி வார்டு எண்.26 ல் 1 உறுப்பினருக்கும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 77 உறுப்பினர்கள் தவிர 142 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.   பேராவூரணி ஒன்றி யத்தில் 183 பதிவியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்தல் களத்தில் 523 வேட்பாளர் கள் உள்ளனர். வாக்குப் பதிவிற்கு இன்னும் 1 தினமே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு கள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ள னர். குறிப்பாக, இரவில் கடு மையான பனி, பகல் பொழு தில் மழையும் வெயிலும் மாறி மாறி வந்தாலும் களத்தில் நிற்கும் வேட்பாளர்களின் கவனம் முழுவதும் வாக்கா ளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் முனைப்பில் இருப்பதை கிராமங்கள் தோறும் காண முடிந்தது.  கிராம ஊராட்சிகளை பொறுத்தவரை போட்டியி டும் அனைத்து வேட்பா ளர்களும் வெற்றி பெற வேண்டும் என்பதை கெளரவ பிரச்சனையாக நினைத்து பணத்தை தண்ணீராக செலவு செய்வதாகவும், பல இடங்களில் வாக்கா ளர்களுக்கு தாராள கவனிப்பு தொடங்கி விட்ட நிலையில், அரசு மதுபான கடைகள் மூடப்பட்ட நிலையிலும் ஊரெங்கும் மதுவின் நெடி அடிப்பதாகவும் மக்கள் கூறினர்.  களத்தில் நிற்கும் ஒவ்வொரு வேட்பாளரும் தனது வெற்றிக்கனியை பறிக்க பல்வேறு வியூ கங்களில் வாக்காளர்களை சந்தித்து வருகின்றனர். இடைவிடாத ஒலிபெருக்கி சத்தங்கள்,  தனது ஆதர வாளர்களுடன் கூட்டம் கூட்டமாக வந்து வாக்குகள் சேகரிப்பு, என களை கட்டியது.

;