தஞ்சாவூர் பாபநாசம் அருகே ரெகுநாதபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண் அமைச்சர் இரா.துரைக்கண்ணு, மாணவர்களுக்கு அரசின் இலவச மடிக்கணினிகளை வழங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார், கல்லூரி முதல்வர் ராஜதுரை, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், துறைத் தலைவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.