tamilnadu

img

சம்பா பருவ சாகுபடிக்கு  13 லட்சம் ஏக்கர் இலக்கு வேளாண்மைத் துறை இயக்குநர் தகவல்

 தஞ்சாவூர், ஆக.21- காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவ சாகுபடிக்கு சுமார் 13 லட்சம் ஏக்கர் பரப்பளவு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என வேளாண்மைத் துறை இயக்குநர் தெட்சிணாமூர்த்தி தெரிவித்தார். தஞ்சாவூர் வட்டம் களிமேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேளாண்மை துறை இயக்குநர், விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்திற்கான அடையாள அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை முன்னிலையில், வேளாண்மைத்துறை இயக்குநர் தெட்சிணாமூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவ சாகு படிக்கு சுமார் 13 லட்சம் ஏக்கர் பரப்பளவு இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சம்பா பருவ சாகுபடிக்கு தேவையான அளவு உரங்கள் மற்றும் வேளாண் பொருட்களை இருப்பில் வைத்திடுமாறு வேளாண்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  நேரடி நெல் விதைப்பு முறை மற்றும் திருந்திய நெல் நடவு முறையை அதிகளவில் பயன்படுத்தவும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும். அனைத்து விவசாய தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி சம்பா சாகுபடி யை அதிக பரப்பளவில் மேற்கொண்டு அதிக மகசூல் கிடைத்திட தேவை யான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.  முன்னதாக, தஞ்சாவூர் வட்டம் மேலவெளி ஊராட்சி ஜோதிமணி வெஸிலி ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடியினை, விதைகளை தூவி வேளாண்மைத் துறை இயக்குநர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, களிமேடு ஊராட்சி சமு தாய கூடத்தில் பாய் நாற்றங்கால் இயந்திர நடவு, சம்பா சாகுபடி முன் னேற்பாடு பணிகள் மற்றும் பிரதம மந்திரி விவசாயிகள் ஓய்வூதிய திட்டம் ஆகியவை குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.  பின்னர், முரளிதரன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பாசன கருவிகளையும், பாசனம் செய்யும் முறையினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.