tamilnadu

டீசல் மானியத்தை பழைய முறைப்படி வழங்க மீனவர்கள் கோரிக்கை

தஞ்சாவூர், ஜன.28- தஞ்சை, புதுகை மாவட்ட விசைப் படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம், திங்கட்கிழமை மல்லிப்பட்டினம் மீன் ஏலக்கூட வளாகத்தில், தமிழ்நாடு மீன வர் பேரவை மாநில பொதுச் செயலா ளர் ஏ.தாஜுதீன் தலைமையில் நடை பெற்றது. தஞ்சை மாவட்ட விசைப் படகு மீனவர் சங்கத் தலைவர் ராஜ மாணிக்கம், செயலாளர் வடுகநா தன், நாட்டுப்படகு மீனவர் சங்க செய லாளர் சந்திரசேகரன், வீரையன்,  புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பா ளர்கள் பாலமுருகன், செல்லத்துரை, மோகன் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில், டீசல் நிலையங்களி லேயே மானியத்துடன் டீசல் வழங்க வேண்டும். மீனவர்களை அதிகாரிகள் மிரட்டி, புதிய முறையில் டீசல் அட்டை பெற வேண்டுமென அச்சுறுத்தி வரு கின்றனர். இல்லையெனில் மீன் பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டு வழங்கப்படாது என்று தெரி வித்துள்ளனர்.  மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை அச்சுறுத்தும் போக்கை கைவிட வேண்டும். இனிவரும் காலங்களில், இதுபோன்ற திட்டங்க ளை அரசு செயல்படுத்தும் போது மீன வர்களை கலந்தாலோசிக்க வேண்டும். மீண்டும் பழைய நடை முறையிலேயே மானிய விலை டீசல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட  மீனவர்களை ஒருங்கிணைத்து வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.  இதில் மற்ற மாவட்ட மீனவர்க ளையும் ஒருங்கிணைத்து போராடு வது” என முடிவு செய்யப்பட்டது.

;